Archive for May, 2010

போட்டுத் தாக்கு–ஒரு ஜாலி ரிப்போர்ட்

Saturday, May 15th, 2010

“முன் தினம் பார்த்தேனே, பார்த்ததும் பூத்தேனே”  என்று காதலித்து பின் மணமுடித்த அல்லது “மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம்” என்று அம்மா/அப்பா பார்த்த பெண்ணை மணந்துகொண்ட திருமணமான ஆண்களின், அன்றைய (திருமணத்திற்கு முன்)  இன்றைய (திருமணத்திற்குப் பின்) சுவாரசியமான உரையாடல்களை ரிவைண்ட் செய்யலாமா?

தி.மு. (தொலைபேசியில்) — இன்னும் கொஞ்ச நேரம் பேசலாமே.

தி.பி.                                                — என்ன விஷயம் சீக்கிரம் சொல்லு. எனக்கு ஆஃபிஸில் நிறைய வேலை இருக்கு.

தி.மு. (பீச்சில்)  –  இந்த அலை எவ்வளவு அழகா இருக்கு. உன் கூட நிறைய நேரம் இப்படியே உட்கார்ந்திருக்கலாம் போல இருக்கு.

தி.பி.                       — போலாமா ? ரொம்ப நேரமாச்சு.

தி.மு. (ஹோட்டலில்) –  நீ  ஐஸ்கிரீம் சாப்பிடற அழகை பார்த்துக் கொண்டே இருக்கலாம். தினமும் இங்கேயே மீட் பண்ணலாமா?

தி.பி.                                       — ஹோட்டல் எதுக்கு, ரொம்ப நேரம் வெய்ட் பண்ணனும். வீட்டிலேயே சிம்பிளா ஏதாவது பண்ணிடேன்.

தி.மு. (பஸ் ஸ்டாப்பில்)– ரொம்ப நேரமா பஸ்ஸுக்காக வெய்ட் பண்றீங்க போல இருக்கு. நான் வேணா டிராப் பண்ணட்டுமா?

தி.பி.                                           — நீ பஸ்ல போய்டறியா? எனக்கு ஆஃபிஸுக்கு சீக்கிரம் போகணும்.

தி.மு.           –    ஆஃபிஸில இன்னிக்கு வேலை சீக்கிரம் முடிஞ்சிடுச்சு. அதான் பர்மிஷன் போட்டு உன்னைப் பார்க்க வந்தேன்.

தி.பி.             –   ஆஃபிஸில இன்னிக்கு நிறைய வேலை இருக்கு. ஈவ்னிங் வர லேட்டாகும்.

தி.மு.           –   நீ பேசறத கேட்டுண்டே இருக்கலாம் போல இருக்கு.

தி.பி.            –   ஏன் தொணதொணன்னு பேசிண்டே இருக்கே?

தி.மு.          –   இந்த லெமன் எல்லோ கலர் டிரஸ்ஸில தேவதை மாதிரி இருக்கீங்க.

தி.பி.           –   ஏதாவது ஒரு டிரஸ் போட்டுண்டு சீக்கிரம் கிளம்பேன், எவ்ளோ நேரம்.

தி.மு.          –   உன் கையால பண்ணா சாதாரண சாப்பாடு கூட விருந்து மாதிரி இருக்கு.

தி.பி.           –   சே,   மனுஷன் சாப்பிடுவானா இந்த சாப்பாட்டை.

தி.மு.         –   இன்னிக்கு ஹாலிடே தான, எங்கயாவது வெளில போலாமா?

தி.பி.          –   நாளைக்கு கண்டிப்பா இந்த வேலையை முடிச்சு கொடுத்தாணும். அதனால வீட்டில பண்ணலாமேன்னு இருக்கேன்.

தி.மு.        –   ஒண்ணே ஒண்ணு தரட்டுமா ?

தி.பி.         –   ஒண்ணு குடுத்தேன்னா கன்னம் வீங்கிடும், ஜாக்கிரதை.

‘எப்படி இருந்த நீங்க இப்படி மாறிட்டீங்க’        ஏன் சார்?

பி.கு. :-

என் இனிய கணவருக்கு, இந்த லிஸ்ட்ல நீங்க இல்லவே இல்லை (என் தலை மட்டும் மேலும் கீழுமாக ஆமாமென்றதை நல்லவேளை அவர் கிரிக்கெட் மேட்ச் ரொம்ப சுவாரசியமாக பார்த்துக் கொண்டிரு்ந்ததால் கவனிக்கவில்லை)

********

பிடித்திருக்கிறதா? ரசித்தீர்களா?

Subscribe to read posts on email

Enter your email address:

Delivered by FeedBurner